ரூ 100 கோடி! 7 மணி நேர விசாரணை, 246 கேள்விகள்! spelling mistake -லாம் கரெக்ட் செய்தேன்! அன்பில் கூல்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், போலீசார் கேட்ட கேள்விகள் மற்றும் தனது பதில்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
ரூ.100 கோடி மோசடி புகார்
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 177 தனியார் பள்ளிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷிடம் 7 மணி நேரம் விசாரணை
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அன்பில் மகேஷ் தொடர்புடைய 9 இடங்களில் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 18-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அன்பில் மகேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
295 கேள்விகளில் 246 கேள்விகள்!
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், போலீசார் தயாரித்து வைத்திருந்த 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு தான் பதில் அளித்ததாக தெரிவித்தார்.
ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்ததாகவும், அந்த பதில்களை போலீசார் பதிவு செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள கேள்விகள் தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“Spelling mistake இருந்தது.. சரி செய்தேன்!”
விசாரணையில் தனது பதில்களை போலீசார் பிரிண்ட் அவுட்டாக வழங்கி படித்துப் பார்க்கச் சொன்னதாக அன்பில் மகேஷ் கூறினார்.
அப்போது சில இடங்களில் எழுத்துப்பிழைகள் (spelling mistakes) இருந்ததை தான் சுட்டிக்காட்டியதாகவும், போலீசார் அவற்றை திருத்திய பிறகு அந்த ஆவணங்களில் தன்னிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இது பொய்யான வழக்கு” என அன்பில் மகேஷ் கருத்து
தனது வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தியாளர்கள் கேட்டபோது, அவற்றில் வழக்குடன் தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ரிவ்யூ கூட்டங்கள், பட்ஜெட்டுக்குப் பிறகு தயாரித்த அறிக்கைகள் மற்றும் சட்டப்பேரவையில் தான் பேசிய புள்ளிவிவரங்





Comments