பொள்ளாச்சிக்கு விசித்திரமான சிக்கல்.. சேலம், பாலக்காடு, மதுரை.. திசை தெரியாத ரயில் பயணம்

பொள்ளாச்சி ரயில்வே தொடர்பான நிர்வாக அமைப்பு குறித்து தற்போது புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளன. பொள்ளாச்சி பகுதி தற்போது பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே கோட்டத்தின் கீழ் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியை மதுரை அல்லது சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதன் மூலம் நிர்வாக ஒருங்கிணைப்பு, புதிய ரயில்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சி–போத்தனூர் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான இறுதிக்கட்ட ஆய்வுக்கும் ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை–பொள்ளாச்சி இடையிலான ரயில் போக்குவரத்து மேலும் மேம்படும் வாய்ப்பு உள்ளது.
பொள்ளாச்சிக்கு ரயில்வே கோட்டம் எந்த பகுதியில் இருக்க வேண்டும் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. பாலக்காட்டிலேயே தொடருமா? மதுரையுடன் இணையுமா? அல்லது சேலத்துடன் இணைக்கப்படுமா? என்பதற்கு ரயில்வே நிர்வாகத்தின் முடிவை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.





Comments