கோவை அருகே பெண் அடித்துக் கொலை
- Aug 13
- 1 min read

கோவை அருகே பெண் ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியில் வசித்து வந்த சாந்தி (58) என்பவர் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன, இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சம்பவங்களால் கோவை பகுதியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சாந்தி கொலை வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.





Comments