காதல் தோல்வி, தற்கொலை முயற்சி! 2 திருமணம்.. 2 விவாகரத்து.. தமிழ் நடிகை சார்மிளாவுக்கு நடந்தது என்ன?

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சார்மிளா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வி, திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து சமீபத்திய பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாபு ஆண்டனி மீது காதல்
1990களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சார்மிளா, நடிகர் பாபு ஆண்டனியுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்தார். அந்த காலகட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகள் காதலில் இருந்ததாகவும், அந்த உறவு திருமணத்தில் முடியாமல் போனதால் தான் மிகவும் மனமுடைந்ததாகவும் சார்மிளா கூறியுள்ளார். காதல் தோல்வியால் ஒரு கட்டத்தில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது தாயார் தன்னை காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் திருமணம்.. விவாகரத்தில் முடிந்தது
காதல் தோல்விக்குப் பிறகு உதவி இயக்குநராக இருந்த கிஷோர் சத்யாவை சார்மிளா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என அவர் கூறியதாக சார்மிளா தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘சேது’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோதும், தனது கணவர் விரும்பமாட்டார் என நினைத்து அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றதாக சார்மிளா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது திருமணமும் விவாகரத்து
அதன்பிறகு தனது சகோதரியின் நண்பரான ராஜேஷை சார்மிளா திருமணம் செய்துகொண்டார். ராஜேஷ் தன்னைவிட எட்டு வயது இளையவர் என்றும், அவர் மென்பொருள் பொறியாளராக இருந்ததாகவும் சார்மிளா கூறியுள்ளார்.
மதம் தொடர்பான கருத்து வேறுபாடுகளும் திருமண வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றிருந்தாலும், மகன் காரணமாக தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் சார்மிளா கூறியுள்ளார்.
“காதல்தான் என் வாழ்க்கையை பாதித்தது”
தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் காதல் உறவுகள் இருந்ததாகவும், அந்த அனுபவங்களில் இருந்து போதுமான பாடங்களை கற்றுக்கொள்ளத் தவறிவிட்டதாகவும் சார்மிளா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த சார்மிளாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த திருப்பங்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.





Comments