top of page

மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள்.. "மனித உரிமை மீறல் இல்லை.." சிஆர்பிஎஃப் சொன்ன அதிர்ச்சி பதில்

Sep 1
1 min read

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில், போலீசார் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. ஜூலை 20ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தடியடி, கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.


ஆர்டிஐ கேள்விக்கு சிஆர்பிஎஃப் பதில்

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் எம்.பி சாகேத் கோகலே ஆர்டிஐ மூலம் சிஆர்பிஎஃப்-க்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் மனித உரிமை மீறல் தொடர்பான விதிகளுக்குள் வராது எனக் கூறி தகவல்களை வழங்க சிஆர்பிஎஃப் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டிலும் இதே காரணம் கூறப்பட்டதாக சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.


புதிய சர்ச்சை

மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களில் ஆர்டிஐ சட்டத்தின் விலக்கு பொருந்தாது என்ற நிலையில், பெல்லட் குண்டுகள் பயன்படுத்திய விவகாரத்தை அந்தப் பிரிவில் சேர்க்காதது குறித்து கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த பதிலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றத்தின் கருத்தை கோரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு சிஆர்பிஎஃப் அளித்துள்ள இந்த பதில் தற்போது புதிய அரசியல் மற்றும் சட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page