top of page

கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு செக்.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய ஐகோர்ட் தீர்ப்பு

Sep 1
1 min read

அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான அரசு வேலை உரிமை அல்ல; அது ஒரு சலுகை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


9 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கேட்டு வழக்கு

பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.


ஐகோர்ட் சொன்ன முக்கிய விஷயம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. கோவிந்தராஜன் அமர்வு, கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர முடியாது என்று தெரிவித்தது.

மேலும், அரசு வேலைகளில் தகுதி, சம வாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியலமைப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே

கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்து, உண்மையில் தகுதியான மற்றும் நெருக்கடியான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.


இதனால், அரசு ஊழியர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையிலான பணியை தங்களது நிரந்தர உரிமையாக கோர முடியாது என்பது இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகியுள்ளது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page