முதல்வர் விஜய்யுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய்யை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீப காலமாக தவெக அமைச்சர்கள், முதல்வர் விஜய்யை 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பும் கருத்து மோதல்களும் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக விஜய்யின் பிரதமர் வேட்பாளர் விவகாரம், தவெக–காங்கிரஸ் உறவு உள்ளிட்ட அரசியல் விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு முன்பும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் விஜய் தலைமையிலான கூட்டங்களில் மாணிக்கம் தாகூர் பங்கேற்றுள்ளார்.
பிரதமர் வேட்பாளர் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நேரத்தில் விஜய்–மாணிக்கம் தாகூர் சந்திப்பு நடந்துள்ளதால், இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது தமிழக அரசியலில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.





Comments