top of page

காங்கிரஸ் உடனான மோதலை ரசிக்கும் விஜய்? அமைச்சர்களின் 'பிரதமர்' பேச்சுக்கு கடிவாளம் போடாதது ஏன்?

Aug 31
1 min read

2029 மக்களவைத் தேர்தலை முன்வைத்து, முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தவெக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பிரதமர் வேட்பாளர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2029 தேர்தலில் ராகுல் காந்திதான் தங்களது பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?

அமைச்சர்கள் தொடர்ந்து விஜய்யை தேசிய அரசியலுடன் இணைத்து பேசினாலும், விஜய் இதுவரை அவர்களை பகிரங்கமாக கட்டுப்படுத்தவில்லை என்பது கவனத்தை பெற்றுள்ளது.

இதனால், அமைச்சர்களின் பேச்சு அவர்களின் தனிப்பட்ட கருத்தா அல்லது விஜய்யின் மௌனமான ஒப்புதலுடன் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


சமீபத்திய கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்ததாக தகவல் வெளியானதும், அவரது தேசிய அரசியல் குறித்த விவாதம் மேலும் அதிகரித்துள்ளது.


கூட்டணிக்குள் வெடித்த மோதல்

விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சு தொடர்ந்தால், அது தவெக - காங்கிரஸ் கூட்டணியில் நேரடி மோதலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.


காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால், இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளார்.

இதனால் தற்போது கேள்வி “விஜய் பிரதமர் வேட்பாளரா?” என்பதைக் கடந்து, “இந்த விவகாரத்தால் தவெக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா?” என்ற நிலைக்கு சென்றுள்ளது.


விஜய்யின் மௌனம் எதை காட்டுகிறது?

அமைச்சர்களின் பிரதமர் பேச்சுக்கு விஜய் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காதது பல்வேறு அரசியல் கணக்குகளுக்கு வழிவகுத்துள்ளது.

ஒருபுறம் காங்கிரஸுடன் ஆட்சி நடத்த வேண்டிய நிலை; மறுபுறம் தனது கட்சிக்குள் உருவாகும் தேசிய அரசியல் எதிர்பார்ப்பு. இந்த இரண்டையும் விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே அடுத்தகட்ட முக்கிய கேள்வியாக உள்ளது.


அமைச்சர்களின் 'விஜய் பிரதமர்' பேச்சை விஜய் தொடர்ந்து அனுமதிப்பாரா? அல்லது காங்கிரஸ் அழுத்தத்துக்கு பிறகு கடிவாளம் போடுவாரா? என்பதுதான் தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page