மீனவர்களின் தோழன் விஜய்.. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம்.. பின்வாங்கும் தவெக? அரங்கேறும் திட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் நேரடியாக மீனவர்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பட்டினப்பாக்கம் திட்டத்தை அரசு தொடருமா அல்லது மாற்று முடிவு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்
பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.5 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.





Comments