வெடித்து சிதறிய பெட்ரோல் கேன்.. உடலில் தீப்பரவி 2 பேர் பலி.. விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஏற்பட்ட பெட்ரோல் கேன் வெடிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென வெடித்து சிதறியதில் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதில் அருகில் இருந்தவர்களின் உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழா நிகழ்ச்சிகளில் எரிபொருள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.





Comments