வளர்ச்சியே பிடிக்காதா சார்? நந்தம்பாக்கத்திலும் கை வைக்கும் விஜய்? ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு!

சென்னையில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த திட்டம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
நந்தம்பாக்கம் பகுதி ஏற்கனவே முக்கியமான ஐடி மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படும் வளர்ச்சி மையமாக இருந்து வருகிறது. இங்கு புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அலுவலகங்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் தினசரி பயணம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், அரசு நிர்வாகத்திற்கு ஏற்ற வகையில் போதிய இடவசதி கிடைப்பது, போக்குவரத்து வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நந்தம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் சென்னை நகரின் வளர்ச்சிக்கு சாதகமா அல்லது ஏற்கனவே வளர்ந்து வரும் ஐடி மையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற விவாதம் தற்போது உருவாகியுள்ளது.





Comments