பிரிட்டன் பயணத்தில் விஜய்! லண்டனில் உள்ள மனைவி சங்கீதாவை சந்திக்கிறாரா? மீண்டும் பரபரப்பு

தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் செப்டம்பர் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், லண்டனில் வசித்து வரும் அவரது மனைவி சங்கீதாவை விஜய் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
செப்டம்பர் 10-ல் பிரிட்டன் பயணம்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்லும் விஜய், இதற்காக சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
முதல்வர் என்ற முறையில் வெளிநாட்டு பயணத்திற்கான பிரத்யேக பாஸ்போர்ட்டை பெறுவதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
லண்டனில் சங்கீதா
விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பிரிட்டன் பயணத்தின்போது அவர் தனது மனைவியை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சங்கீதா தொடர்பான தனிப்பட்ட விவகாரம் கடந்த சில மாதங்களாக அதிக கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது விஜய்யின் லண்டன் பயணம் மீண்டும் அந்த விவகாரத்தை பேசுபொருளாக்கியுள்ளது.
விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற சங்கீதா
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி லண்டனில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் மனுவை வாபஸ் பெற்றதற்கான காரணம் குறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
சந்திப்பாரா விஜய்?
விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய் பிரிட்டன் செல்ல இருப்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பணிக்காக லண்டன் செல்லும் விஜய், அங்கு தனது மனைவி சங்கீதாவையும் சந்திப்பாரா? இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உறவில் அடுத்தகட்ட மாற்றம் என்ன? என்பதே தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் கேள்வியாக உள்ளது.
எனினும், விஜய்–சங்கீதா சந்திப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.





Comments