

அரிசி, பருப்பு விலை உயர்வா? “பொய் பிம்பம்” என்ற தவெக அமைச்சர்.. வெடித்த கண்டனம்!
தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரிசி விலை உயர்வு குறித்த குற்றச்சாட்டுகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் மறுத்துப் பேசியது தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில









